திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் குருவாயூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் பாசன பிரிவு 1- பராமரிப்பில் உள்ள குருவாயல்ஏரியில் மீன் பாசி மகசூல் ஏலம் திருவள்ளூர் உதவி பொறியாளர் செல்வகுமாரி தலைமையில் குருவாயூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

குருவாயல் ஏரி ஏலத்தை எடுக்க நிறைய நபர்கள் வந்திருந்தனர் அந்தப் பகுதியை சேர்ந்த சி.ரவிச்சந்திரன் ஏலத்தை எடுத்தார, ஏலம் உடன் நிகழ்ச்சியில் குருவாயல்ஊராட்சி மன்ற தலைவர் வி.வெங்கட்டம்மாள் துணைத் தலைவர் இ.சண்முகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் எம்.அஞ்சலா, ஜி.மல்லிகா, இ.புனிதவள்ளி, ஆர்.ராஜேந்திரன், டி.வாசு, பி.சுகுணா, இ.சேகர், எஸ்.தனலட்சுமி ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மற்றும் கிராம பெரியோர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானகலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment