இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது, மற்றும் கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்து குறித்தும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்தும் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்து தூய்மை பாரத இயக்கம் குறித்தும் ஜல் ஜீவன் குறித்தும் மற்றும் ஊராட்சி பல்வேறு பணிகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டது, பொதுமக்களின் குறைகளை கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக அந்த குறைகளை தீர்ப்பதாக உறுதி அளித்தார் இதை தொடர்ந்து இந்த கூட்டத்தில் என்னென்ன பணிகளை செய்வது எனும் பணிகளை செய்வது என ஆலோசிக்கப்பட்டது இந்த கிராம சபைகூட்டத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் ஜி.தேவராஜ், வார்டு உறுப்பினர்கள் டி.செல்வகுமார், என்.எம்.அமுதா, எ.கார்த்திக்,எம்.கவுசல்யா ஜி.வனஜா, ஊராட்சி செயலாளர் எஸ்.நரசிம்மன் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment