எல்லாபுரம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டாரத் தலைவர் வி.மூர்த்தி தலைமையில் பெரியபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 April 2023

எல்லாபுரம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டாரத் தலைவர் வி.மூர்த்தி தலைமையில் பெரியபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.


அகில இந்திய காங்கிரஸ் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி எல்லாபுரம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டாரத் தலைவர் வி.மூர்த்தி தலைமையில் பெரியபாளையம் தனியார் திருமண மண்டபத்தில்  செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவிப்பின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெயக்குமார்  ஆலோசனையின்  பேரில் திருவள்ளூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் அவர்களின் வழிகாட்டத்தில் பேரில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவரும்  மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஜோதி சுதாகர் செய்தியாளர்கள் சந்திப்பில்  தெரிவித்ததாவது ராகுல் காந்தி அவர்கள் குமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணத்தில் கூடிய பொதுமக்கள்கூட்டத்தை பார்த்து பொறுத்துக் கொள்ளாத பி.ஜேபி அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக ராகுல் காந்தி அவர்களை தகுதி நீக்கவும் செய்யப்பட்டனர்.

 

அதானின் ஊழலை கண்டுகொள்ளாத பிரதமர் ராகுல்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதிவிலிருந்து தகுதி நீக்கம் செய்ததைகண்டிக்கின்ற வகையிலேயும் இந்த பிஜேபி அரசாங்கம் விரைவில் வீழ்த்தப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பு தெரிவித்தார்.


கே சிவன்ஆசாரி, கே.சி.சசிகுமார், ஜி.ராமதாஸ், இ.டேவிட் செல்லதுரை, ஜெ.சேட், எஸ்.மூர்த்தி, பி.பாபு, ஆகியோர் செய்தியாளர் சந்திப்பின் போது உடன் இருந்தனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி. 

No comments:

Post a Comment

Post Top Ad