திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னகளக்காட்டூர் மூன்றாவது வார்டில் கால்வாய் சுத்தம் செய்யாததால் காய்ச்சல் ஏற்படும் சூழல்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட சின்ன களக்காட்டூர் மூன்றாவது வார்டில் கால்வாய் சுத்தம் செய்யாததால் சின்ன களைக்காட்டூர் கிராமத்தில் வசிக்கும் சேகர், துரை என்பவரின் மனைவி மல்லிகா ஆகியோருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது பற்றி மூன்றாவது வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை, ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கிராமப் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- திருத்தணி தாலுகா செய்தியாளர் சுகுமார்.

No comments:
Post a Comment