திருவள்ளூர் மாவட்டம் பாஜக எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம் பாகல்மேடு பகுதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பாக ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னைக்கு வருகை தர இருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சிறப்பாக வரவேற்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை தலைவர்கள், கிளை நிர்வாகிகள், பிற அணிகளின் நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தின் போது ஈக்காடு புன்னப்பாக்கம் திமுக ஒன்றிய கவுன்சிலர் பாலாஜி என்பவர் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேஷ் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் .
- மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment