திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவாயல் ஊராட்சியில் விவசாய நிலங்களில் சவுடு மண்ணை சட்ட விரோதமாக அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள கே.ஏ சேம்பர்க்கு எடுத்து செல்கின்றனர்.
இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி கொல்லாகின்றனர். மேலும் அருகில் விவசாய நிலங்கள் உள்ளதால் பள்ளம் போட்டு எடுக்கப்படுவதால் அருகில் உள்ள வீடுகளில் குழந்தைகள் திடீரென்று அங்கு சென்றால் விழுந்து அபாயகரமான நிகழ்வுகள் நடப்பதற்கு வழி உண்டாக்குவதாகவும் அதன் அருகிலேயே கொசஸ்த்தலை ஆறு கரை உள்ளதால் மழைக்காலங்களில் வெள்ளம் வரும் பொழுது அதன் வழியாக ஊருக்குள் தண்ணீர் புக நிறைய வாய்ப்பு உண்டாக்கும் ஆகையால் இதன் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிராம பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.
- திருவள்ளுவர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி..

No comments:
Post a Comment