பாபாசாகிப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளையம் பஜாரில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு எல்லாபுரம் மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒன்றிய தலைவர் எஸ்.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெ.ரவி கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார் மற்றும் கன்னிகைபேர், தண்டலம், பாலவாக்கம், ஆகிய பகுதிகளில் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய பிரபாரி சிதம்பரலிங்கம் மாவட்ட பட்டியல்அணி தலைவர் எம்.ராஜன் கிழக்கு ஒன்றிய தலைவர் முனுசாமி எர்ணாங்குப்பம் அனுராதா மற்றும் ஒன்றிய பிற அணி நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க கணபதி.

No comments:
Post a Comment