பாபாசாகிப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு அழிஞ்சிவாக்கம் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி மற்றும் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழா அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கே.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மற்றும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த படத்தையும் ஊராட்சி மன்ற தலைவர் கே சுதாகர் திறந்து வைத்து சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரத கட்சியின் எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர்
அழிஞ்சிவாக்கம் பிரகாஷ்ராவ், இ.மேநாதன், ஜி.முருகன், ஆர்.சம்பத், ஹரிபாபு, பாலாஜி, சத்தியா,பிரசாத், தமிழ், அசோக், சிலம்பு மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க கணபதி.

No comments:
Post a Comment