பாபா அம்பேத்கர் அவர்களின் 133- வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளையத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு ஜனதாதளம் தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு ஜனதாதள தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் இணைந்து மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில்
மாநில இணை செயலாளர் கா.மகாலிங்கம், திருவள்ளூர் கோட்டத் தலைவர் ந.குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் பி.சோக்கு, வி.முத்து, எஸ்.பார்த்திபன், சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஆர்வலர் ஜி.டி.வேலுமயில், கவிஞர் தஞ்சை மு.ராமச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர் ஏ.சக்கரவர்த்தி, டேவிட், லோகநாதன், ராஜேஷ், சந்தோஷ், நாகரத்தினம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி
No comments:
Post a Comment