அதிமுக எல்லாபுரம் மேற்கு ஒன்றியம் சார்பில் கோடை வெயிலை ஏழை எளிய மக்களுக்காக நீர் மோர் பந்தலை திறப்பு நிகழ்ச்சி எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுனியம் பி.பலராமன் கலந்து கொண்டு பெரியபாளையம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார், இதில் பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட தாகம் தீர்க்கும் பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பெரியபாளையம் பகுதி அதிமுக கிளை செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் செய்தியாளர் க.கணபதி
No comments:
Post a Comment