வடமதுரை காபிரியேல் ஆலயத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 April 2023

வடமதுரை காபிரியேல் ஆலயத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை காபிரியேல் ஆலயத்தில் தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் மூவரசம்பட்டு குருசேகரம் மற்றும் வடமதுரை குருசேகரம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் இரு குருசேகர தலைவரும் சபை ஊழியர்கள் இயக்குனருமான பி.தேவபிரசாத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டி ஜி கோவிந்தராஜன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.


இந்தநிகழ்ச்சியில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெ.மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆ.சக்திவேலு, மூவரசம்பட்டு குருசேர ஆயர் ஜான்செல்வயாபேஸ், மருத்துவர்கள் ஷேபன் அரசகுமார், யூஜுன் ஈஸ்வரதாஸ், (சித்த மருத்துவர்) விஜய் ஈஸ்வரதாஸ், (பல் மருத்துவர்) ஏஞ்சலின்கிரோஸ், (பொதுமருத்துவர்) மூவரசம்பட்டு குருசேகர செயலாளர் சாலமோன் பாபு, மூவரசம்பட்டு குருசேகர பொருளாளர் மேபல்ஜெபசிங், வடமதுரை குருசேகர செயலாளர் டி. சார்லஸ், வடமதுரை குருசேகர பொருளாளர் எஸ். தமிழ் மன்னன் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டி.சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் கோ.காயத்ரிகோதண்டன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனா அப்புன், பனப்பாக்கம் ராஜேஷ், மாணவரணி அமைப்பாளர் உமாபதி பேட்டை மேடு இ.என்.பார்த்திபன், வடமதுரை உயர்நிலை நற்பணி மன்ற செயலாளர் க.லோகேஷ், மா.ராஜா, தேவப்பிரியன், சங்கர் மேஷாக், ஆசிர்வாதம், பேட்டைமேடு வேதமுத்து, ஜெ.ராஜா, ஜீவன் சுரேஷ், மற்றும் ஏராளமான பொதுமக்கள்கலந்து கொண்டு மருந்து மாத்திரைகளை வாங்கி பயனடைந்தனர்.


திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் 

க.கணபதி

No comments:

Post a Comment

Post Top Ad