அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்த தேர்தல் ஆணையம்; கொண்டாடிய அதிமுகவினர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 April 2023

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்த தேர்தல் ஆணையம்; கொண்டாடிய அதிமுகவினர்.


தேர்தல் ஆணையம் பொதுக்குழு தீர்மானம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் பொது செயலாளர் இரட்டை இலை சின்னம் செல்லும் என தேர்தல் ஆணையம் வழங்கியது அடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

பொதுக்குழு தீர்மானம் பொதுச் செயலாளர் தேர்வு செல்லும் என்றும் மற்றும் இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கே இரட்டை இலை சின்னம் உறுதியானது தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக திருத்தணி ஒன்றியத்தின் சார்பில் திருத்தணி ஒன்றிய வட்டாரவளர்ச்சி அலுவலகம் அருகில் திருத்தணி ஒன்றிய கழக செயலாளர் இ.என்.கண்டிகை .ஏ.இரவி தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கினார்.

 இந்த நிகழ்ச்சியில் நிலவள வங்கி தலைவர் டி.எம்.சீனிவாசன், திருத்தணி ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, ஒன்றிய குழு உறுப்பினர்  பாலாஜி, வேலு, பத்மாபுரம் சுரேஷ், தாடூர் கிளைக் கழக செயலாளர் ரமணா, பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி

No comments:

Post a Comment

Post Top Ad