திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி இடிக்கப்பட்டு மாணவர் விடுதியில் தற்காலிகமாக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது, அப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி அருகாமையில் குப்பைகளை கொட்டி துர்நாற்றம் வீசி வருகின்றது.

ஆகையால் அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்
- திருத்தணி தாலுகா செய்தியாளர் சுகுமார்.
No comments:
Post a Comment