பெரியபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 March 2023

பெரியபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. மாவட்டத்தலைவர் P. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. 


சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்பாளருமான M.சக்கரவர்த்தி கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது பூத்கமிட்டியை உறுப்பினர்கள் எப்படி செயல்படுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் M.பாஸ்கரன், தரவு மேலாண்மை பிரிவு மாநில தலைவர் M.மகேஷ்குமார், மாநில செயற்கு உறுப்பினர் ராஜா, ஓ.பி.சி.மாவட்ட பொது செயலாளர் கே.எஸ்.எம்.சுப்பிரமணி, முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் சிதம்பரலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் ஜெ.ரவி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் K.M.R.முத்துராஜ், நரேஷ்குமார், சுந்தரம், K.நீலகண்டன், மாவட்ட சிறுபான்மை அணிதலைவர் P.பிரபாகரன், பட்டியல் இன அணியின் மாவட்ட தலைவர் கன்னிகை M.ராஜா, விவசாயி மாவட்ட அணித்தலைவர் E.R.சரத்குமார், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ஜீவரத்தினம், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் J.ஜெகதீஸ்வரன், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் P.A.முனுசாமி, ஊத்துக்கோட்டை R.ராஜேஷ், பூண்டி ஒன்றிய தலைவர் சாந்தி, ஒன்றிய பொது செயலாளர் மாளந்தூர் G.தணிகாசலம் எர்ணாகுப்பம் நிர்மலா மற்றும் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் மாவட்ட துணைத் தலைவர்கள் மாவட்ட பொது செயலாளர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மண்டல தலைவர்கள் மண்டல பொதுச் செயலாளர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


- மாவட்ட செய்தியாளர் க.கணபதி. 

No comments:

Post a Comment

Post Top Ad