சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியின் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற வடமாநில இளைஞர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 February 2023

சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியின் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற வடமாநில இளைஞர்.


சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியின் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற வடமாநில இளைஞர். கள்ளக்காதலியையும் தாக்கி கழுத்தில் வெட்டி தப்பியோட்டம். இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.  இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் தமது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தார். 


நேற்றிரவு பணி முடித்து வீட்டிற்கு வந்த துவர்க்கா பார் தமது மனைவி, குழந்தைகள் காணாமல் போனது கண்டு அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது அருகில் உள்ள குட்டுலு என்பவரது வீட்டிற்கு சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனையடுத்து தமது மனைவி, குழந்தைகளை தேடிக்கொண்டு வந்து பார்த்தபோது குட்டுலு வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. ஜன்னல் வழியே பார்த்த போது இரண்டு குழந்தைகள் வாயில் கட்டப்பட்டும், மனைவி காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். 


இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் மயங்கிய நிலையில் இருந்த சுமிதா பார்  (21) என்ற இளம்பெண்ணை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தலையில் காயம், கழுத்தில் வெட்டுக்காயம் என உயிருக்கு ஆபத்தான நிலையில் இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட சரத் (4), ரீமா (1) ஆகிய இரண்டு குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணின் கணவன் துவர்க்கா பாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஒரே தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததால் துவர்க்கா பார் மற்றும் குட்டுலு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணமாகாமல் இருந்த குட்டுலு துவர்க்கா பாரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இன்று குழந்தைகளுடன் குட்டுலு வீட்டிற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் குட்டுலு இரண்டு குழந்தைகளையும் தலையில் தாக்கியும் வாயில் டேப்பில் கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.தொடர்ந்து தமது கள்ளக்காதலியையும் அரிவாளால் தாக்கி கழுத்தில் வெட்டி விட்டு வீட்டை பூட்டு கொண்டு அங்கிருந்து கள்ளக்காதலன் குட்டுலு தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


தொடர்ந்து இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 4தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய பீகாரை சேர்ந்த குட்டுலு என்ற இளைஞரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இரண்டு குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad