குன்றத்துார் - குமணஞ்சாவடி பிரதான சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இதில், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு குமணஞ்சாவடியில் சேகரிக்கப்படும் குப்பை, துப்புரவு மற்றும் துாய்மை பணியாளர்களால், சாலையோரம் கொட்டி எரிக்கப்படுகிறது.இதனால் ஏற்படும் புகையால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் சிரமப்படுகின்றனர்.
சாலையோரம் குப்பை கொட்டி தீயிட்டு எரிப்பதை, நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

No comments:
Post a Comment