கஸ்தூரிக்கு குப்புசாமிக்கு குடும்ப பிரச்சினை காரணத்தினால் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் கஸ்தூரிக்கு குப்புசாமிக்கு பத்து நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணத்தினால் கஸ்தூரி கோபித்துக் கொண்டு அருகாமையில் உள்ள தன் தாய் கல்யாணி வீட்டிற்கு சென்றுள்ளார்.

தன் தாயிடம் நடந்த தகராறு கூறி அங்கே தங்கி உள்ளார் இந்த நிலையில் மனைவியை வீட்டிற்கு அழைத்து வர குப்புசாமி தன் மாமியார் கல்யாணி வீட்டிற்கு சென்று கஸ்தூரியை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறி கல்யாணிடம் தகராறு செய்துள்ளார் அப்போது கஸ்தூரியை வீட்டிற்கு அனுப்ப முடியாது என்று கல்யாணி கூறியதாக இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி மறைத்து வைத்திருந்த கத்தியால் கல்யாணியை குத்தியுள்ளார் அப்போது ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கல்யாணி கீழே விழுந்துள்ளார் இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கல்யாணி மகள் கஸ்தூரி ஆகியோர் அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கல்யாணியை பரிசோதித்த மருத்துவர்கள் கல்யாணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து கல்யாணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவத்திற்கு காரணமான மருமகன் குப்புசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடும்ப தகராறு காரணத்தினால் மாமியாரை கத்தியால் குத்திய சம்பவம் கும்மிடிப்பூண்டி பெத்தி குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment