திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டையில் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த அறக்கட்டளையின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ-மாணவிகளுக்கு டி.ஷர்ட், டிபன் பாக்ஸ், மதிய உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் தலைவி பிரியா,துணை தலைவி நளினி மாயா ஆகியோர் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக (ஓ.பி.எஸ்) மாவட்டச் செயலாளரும், எல்லாபுரம் ஒன்றிய 18-வது வார்டு கவுன்சிலருமான ஜி.சரவணனுக்கு போளாட்சியம்மன் கோவிலில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு ஜி.சரவணன் நலத்திட்ட உதவிகளை வழங்கி மதிய உணவை பரிமாறினார். பின்னர், அறக்கட்டளையின் பணிகளை வாழ்த்தி பேசினார். இதில், அறக்கட்டளையின் சார்பாக காமராஜ், தேவராஜ், நாகராஜ், குமரன், நந்தகுமார், ராஜகோபால், கார்த்திக், காணிமுத்து, சாந்தி, திருப்பாலம்மா, ராமலட்சுமி 9-வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் லட்சுமி யுவராஜ்,எல்லாபுரம் ஒன்றிய 11-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் திருமலை சிவசங்கர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரி வரவேற்றார். முடிவில், ஆர்.தேவராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment