இதனை அடுத்து தீபாவளி நெருங்கவும் தீபாவளி பண்டு சீட்டுக்கு பணம் கட்டியவர்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை என்றும் இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள தீபாவளி பண்டு நடத்திய ஜோதி இடம் சென்று கேட்டபோது பொருட்கள் இன்னும் வரவில்லை வெகுவிரைவில் வழங்கப்படும் என்று பொதுமக்களுடன் கூறி தப்பித்து வந்துள்ளார். இவர் கூறிய நாட்கள் பிறகு சென்று பார்த்தபோது அலுவலகம் மூடி இருந்தது கண்டு தீபாவளி பண்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்தார்.

இதனால் ஜே பி ஸ்டார் ஏஜென்சி கடைகளை அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவு ஆனார், இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் முகவர்கள் கொடுத்த புகாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் தலைமையில் இரண்டு குழுக்களை நியமித்து தலைமறைவான ஜோதியை தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜோதியை போலீசார் கைது செய்தனர் மேலும் இந்த மோசடி வழக்கில் ஜோதி மனைவி சரண்யா தந்தை மதுரை (66) அவரது தம்பி பிரபாகர் ஆகிய நான்கு பேரையும் கையும் களவுமாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் தாமரைப்பாக்கத்தில் இருந்த ஜே பி ஜோதியின் கடைக்கு மாவட்ட காவல்துறையினர் ஜே பி ஸ்டார் எண்டர்பிரைசஸ் கடைக்கு சீல் வைத்தனர். இந்த மோசடி தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதனை அடுத்து மைதான ஜே பி ஜோதியின் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது கிடங்கில் இருந்த பொருட்களை ஏலம் விடக் கோரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்த தீர்ப்பு மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ அவரது உத்தரவின் பெயரில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தாமரைப்பாக்கத்தில் உள்ள ஜே பி ஜோதி ஸ்டார் எண்டர்பிரைசஸ் கடையில் சுமார் 95 ஆயிரம் மதிப்புள்ளான மளிகைப் பொருட்கள் மற்றும் சோப்பு கிளீனிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடும் நடவடிக்கையில் இருபத்தி ஐந்து சதவீதம் கழிவு போக மீதமுள்ள 72000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏலம் விடப்பட்டது.
இதனை ஜெயக்குமார் என்பவர் ஏலம் எடுத்தார் இப்ப பொருட்களை அவரிடம் ஒப்படைத்ததாக மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தெரிவித்தார். இந்த ஏலத்தின் போது திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பெண்கள் காவல்துறை கண்காணிப்பாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment