மிகவும் பழமை வாய்ந்த வண்டார்குழலியம்மை கோயிலில் ஆருத்ரா விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 January 2023

மிகவும் பழமை வாய்ந்த வண்டார்குழலியம்மை கோயிலில் ஆருத்ரா விழா.


திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது பழமை வாய்ந்த வண்டார்குழலியம்மை சமேத வடாரண்யேஸ்வரர் கோயில். இந்த கோயில் திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்த உப கோயிலாகும். சிவபெருமான் திருநடனம் புரியும் ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தின சபையை உடைய பெருமை கொண்டது. திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகவும் விளங்குகிறது.

இந்தக் கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா விழா விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் நேற்றிரவு (ஜன.5) 9 மணிக்கு கோயில் தலவிருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் ஆருத்ரா மகா அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆருத்ரா மகா அபிஷேகத்தை பக்தர்கள் காணும் வகையில் கோயில் வளாகத்தில் ஆங்காங்கே பெரிய அளவில் பந்தல்கள் போடப்பட்டது.


இரவு 9 மணி முதல் அதிகாலை வரை விடிய விடிய சுவாமிக்கு பால்,தேன், வில்வப்பொடி, வாழை, பலா, பூக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு விடிய விடிய அபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆருத்ரா அபிஷேகத்தை திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, மணவூர், அரக்கோணம், வேலூர், பூந்தமல்லி, சென்னை என பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை கண்டுகளித்து சுவாமியை மனம் உருகி வழிபட்டனர். மேலும் கோயில் வளாகம் உள்ளேயும், வெளியேயும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad