மீஞ்சூரில் மருத்துவர் ராஜேஷ்க்கு பிரிவு உபசார பாராட்டுவிழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 January 2023

மீஞ்சூரில் மருத்துவர் ராஜேஷ்க்கு பிரிவு உபசார பாராட்டுவிழா.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.இங்கு வட்டார மருத்துவ அலுவலர் தலைமை மருத்துவராக ஜி.எஸ். ராஜேஷ் என்பவர் பணியாற்றி வந்தார் இவர் விருப்ப மாற்றலாகி சென்றதையடுத்து அவருக்கு பிரிவு உபசார பாராட்டு விழா நடைபெற்றது.


இதற்கான விழா மீஞ்சூரில் உள்ள எழில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, அப்பொழுது டாக்டர் ராஜேஷ் அவர்கள் 9 வருட காலம் வட்டார மருத்துவ அலுவலர் பணியில் பணியாற்றி அந்த காலத்தில் புரிந்த சாதனைகளை மேடையில் அனைவரும் எடுத்துரைத்தனர்,  மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தேசிய அளவில் என் குவாஸ்(NQUAS) எனப்படும் தேசிய மருத்துவமனை சான்றிதழை  பெற்று தந்துள்ளார், அவசர சிகிச்சைக்கான பிரிவு, புற நோயாளிகள் பிரிவு உள்நோயாளி கள் பிரிவு,நோயாளிகள் அமரும் அறை, மேம்படுத்தப்பட்ட ரத்த பரி சோதனை ஆய்வகம், கர்ப்பிணி கள் உட்பிரிவு குழந்தைகள் பிரிவு, அலுவலகம், கண் பரிசோதனை பிரிவு, தொழுநோய் மற்றும் காச நோய் பிரிவு, சித்தா பிரிவு, பல் சிகிச்சை பிரிவு, மருத்துவமனையின் சுகாதாரம் என தனியார் மருத்துவமனைக்கு நிகராக மாற்றம் செய்துள்ளார், மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் உயர்திரு மா சுப்பிர மணியன் அவர்களின் பொற்கரங் களால் விருது வழங்கப்பட்டது.


மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட அரச ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் காட்டூர், மெதூர், தேவம்பட்டு, அத்திப்பட்டு உள்ளது, காட்டூர் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் தரம் உயர்த்தி எண் குவாஸ் (NQUAS) எனப்படும் தேசிய சான்றிதழை பெற்று தந்துள்ளார், மெதூர் கிராமத்திற்கு புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஐந்து புதிய துணை சுகாதார நிலையம் அமைத்துக் கொடுத்து ள்ளார்,  எம் எம் ஆர்(MMR) எனப்படும் கர்ப்பிணிகளின் இறப்பு விகித த்தை மற்றும் ஐ எம் ஆர் (IMR)எனப் படும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் இவர் பணியில் குறைக்கப்பட்டிருக்கிறது.


தேவம்பட்டை சேர்ந்த ஒரு சிறுமி சித்திரப்பிரியா அவர்களின் அறுவை சிகிச்சைக்காக சக ஊழியர்களிடம் மற்றும் அவர்களுடைய நன்கொடையும் ரூபாய் ஒரு லட்சம் நிதியாக வழங்கப்பட்டிருக்கிறது, மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மித்ரா எனப்படும் சிறுமிக்கு ரூபாய் 30,000 கொடுத்து உதவியதுடன், அவர்களுக்கு தாய் தந்தை இல்லை, அவர் பாட்டி தான் வளர்த்து வருகிறார், என்பதால், அந்த சிறுமிக்கு இவர்கள் தலை மையில் இருந்த கிராம சுகாதார செவிலியர்கள் உடன் தங்கி பிழைக்க  மாட்டார்கள் என்று இருந்த சிறுமியை உயிரூட்டி காப்பாற்றி இருக்கிறார்கள்.



போஸான் அபியான் (Poshan Abiyan)எனப்படும் தேசிய ஊட்டச் சத்து திட்டம் சார்பாக தேசிய அளவில் பணியாற்றியதற்காக மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை மருத்துவர் ஜி. எஸ். ராஜேஷ் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை 2018 ஆம் ஆண்டில் மாநில அளவில் மூன்றாவது இடம் மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் விருது வழங்கியுள்ளார்.



இவர் பணியாற்றிய 9 ஆண்டு களில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வீரராகவர், சுந்தரவல்லி, மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னையா, ஆல்பி ஜான் வர்கீஸ், ஆகியோர் சுதந்திர தின விழா,குடியரசு தினம் விழாவில் விருது வழங்கி பாராட்டி உள்ளனர்.


கொரோனா காலத்தில் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார் மேலும் டெங்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அதிகமாக இருக்கும் போது பொதுமக்களை காப்பாற்றுவதில் இவரது பணி சிறப்பு,இப்பொழுது டெங்கு மற்றும் வயிற்றுப்போக்கு அதிகம் இல்லை என்ற நிலைமை மீஞ்சூர் மற்றும் அதன் பகுதியில் உள்ளது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்து நோய் தொற்று இல்லை என்று நிலையை உண்டாக்கியுள்ளார். 


போலியோ, தொழுநோய்களை 2030க்குள், ஒழிப்பது, தேசிய காசநோய் ஒழிப்பு 2025க்குள் ஒழிப்பதற்கு முழுமுதற் எடுத்தார். ஆர்பிஎஸ்கே எனப்படும் குழந்தை களுக்கு பிறவி குறைபாடுகளை அவர்கள் தலைமையில் உள்ள மருத்துவர்கள் கண்டுபிடித்து குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியு ள்ளார், மக்களை தேடி மருத்துவம் பணி மீஞ்சூர் பகுதியில் சிறப்பு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை வைட்டமின் ஏ திரவம் மற்றும் குடற்புழு நீக்கும் மாத்திரை, வியாழன் தோறும்இரும்பு சத்து மாத்திரை(junior wifs,senior wifs) அங்கன்வாடி குழந்தைகளுக்கு மற்றும் பள்ளி சீரார்களுக்கு முறை யாக வழங்கப்பட்டு வருகிறது, மேலும் பேரிடர் காலங்களில் வரதா புயல், நிஷா புயல்,கஜா புயல், நிவர் புயல், மேன்டோஸ் புயல் மற்றும் மழை போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக் களை காப்போம் என்று இவரது பணி சிறப்பு, மேலும் சி எஸ் ஆர் (CSR) எனப்படும் தனியார் நிறுவன ங்களில் இருந்து மருத்துவ உபக ரணங்கள், கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்களை கொண்டு செல்வ தற்கு ஒரு பெரிய வாகனம்(பஸ்) பெற்றுக் தந்துள்ளார்,


பத்திரிக்கையாளர் சங்கம் தலைவர் பேசுகையில் நமது பாரம்பரியமான பனைமரம் அழிந்து வருகிறது அதை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 3 ஆயிரம் பனை விதைகளை தன் சொந்த நிதியில் வாங்கித்  கொடுத்துள்ளார், திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் விதைக்கப்பட்டு இன்று பனை மரங்கள் வளர்ந்து நின்று கொண்டிருக்கிறது, நம் தமிழ் பாரம்பரியமும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது, இன்னும் பல பணிகளை செய்துள்ளார்  என்று மேடையில் அனைவரும் பேசினார்கள்.


இன்னும் மென்மேலும் அரசு துறைகளில் பணிகள் செய்ய வேண்டும் என்று பாராட்டினார்கள், இறுதியாக மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை மருத்துவர் ஜி எஸ். ராஜேஷ் அவர்கள் 9 ஆண்டு காலம் தன்னுடன் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்தார்.


நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ சிறுனியம் பலராமன், மீஞ்சூர் சேர்மன் ஜி ரவி மீஞ்சூர் சுகாதார மேற்பார்வையா ளர் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad