இதனை அடுத்து இவரது தம்பி சத்திய வேலு இவர் தற்போது எல்லாபுரம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக கட்சி பதவி வகித்து வருகிறார் இவரது மகன் புவன் குமார்(எ) விஷால்(22) இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார் இதனை எடுத்து இவர்களது குடும்பத்திற்கு முன்விரோதம் காரணம் இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று இரவு விஷால் தனது பெரியப்பா திராவிட பாலுவின் வீட்டில் நுழைந்து இரும்பு ராடால் பெரியப்பா மகன் முருகன் அவரது மனைவி ரம்யா தாயார் செல்வி கருணாநிதி ஆகிய நான்கு பேரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்து கொண்டிருந்தபோது இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இவர்களை மீட்டு மஞ்சங்காரனை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ரம்யா பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து போனதாக தெரிவித்தார் மேலும் முருகன் செல்வி கருணாநிதி ஆகிய தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்திற்கு காரணமான விஷாலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுகாயம் அடைந்த மூன்று பேரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சொந்த பெரியப்பா குடும்பத்தை தாக்கிய தம்பி மகன் இச்சம்பவம் கன்னிகை ப்பேர் பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment