திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள இருலிப்பட்டு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 11.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டு வதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர். நந்தினி ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜானகிராமன் முன்னிலை வைத்தார், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சோழவரம் ஒன்றியக்குழு பெருந் தலைவர் ராசாத்தி செல்லசேகரன், ஒன்றிய கவுன்சிலர் அழிஞ்சிவாக் கம் பிரகாஷ், உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சந்தோஷ் குமார், ரமணி சீனிவாசன், உமா மகேஸ்வரி செலமையா, உஷா அசோக் குமார், காயத்ரி சுரேஷ்குமார், சுபாஷினி சதீஷ் பாபு, தயாளன், முரளி, ஊராட்சி செயலர் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment