தாசில்தார் என மூன்று பெண்களிடம் நவீன முறையில் வழிப்பறி செய்த பெண்கைது - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 January 2023

தாசில்தார் என மூன்று பெண்களிடம் நவீன முறையில் வழிப்பறி செய்த பெண்கைது

ஊத்துக்கோட்டை அருகே தாசில்தார் என மூன்று பெண்களிடம் நவீன முறையில் வழிப்பறி செய்த தீபா புஷ்பராணி என்ற பெண்ணை கைது செய்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை.

சென்னை  அம்பத்தூர் சேர்ந்தவர் தீபா புஷ்பா ராணி (35) இவர் கடந்த ஆறு மாதங்களாக திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம், பென்னாலூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் தனியாக ஆடு,மாடுகள், மேய்க்கும் வயதான  மூதாட்டிகளிடம் தான் ஒரு தாசில்தார் என்றும் உங்களுக்கு முதியோர் உதவி தொகை வாங்கித் தருவதாக நம்பவைத்து போட்டோ எடுக்க வேண்டும் நகைகளை கழட்டி கொடுங்கள் என்று நவீன முறையில் வழிப்பறி செய்து  அங்கிருந்து தப்பித்து விடுவதாகவும் தொடர்ந்து மூன்று மூதாட்டிகளிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஊத்துக்கோட்டை போலீசாருக்கு புகார் அளித்ததின் பேரில் தீபா புஷ்பா ராணி பிடிக்க ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் சாரதி  உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 120 கண்காணிக் கேமரா காட்சிகளை  ஆய்வு செய்து ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனையில் நவீன முறையில் வழிப்பறையில் ஈடுபட்ட தீபா புஷ்பா ராணியை கைது செய்தனர்.


மேலும் அவரிடமிருந்து சுமார் 8 சவரன் தங்க நகைகள் காவல்துறையினர் மீட்டனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad