தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 25-ந் தேதி திருவள்ளூருக்கு வருகை தர இருக்கிறார் - அமைச்சர் ஆவடி சாமு நாசர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 25-ந் தேதி திருவள்ளூருக்கு வருகை தர இருக்கிறார் - அமைச்சர் ஆவடி சாமு நாசர்.


தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 25-ந் தேதி திருவள்ளூருக்கு வருகை தர இருக்கிறார்.  பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் ஆவடி சாமு நாசர் சிறப்புரை - எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி- திருத்தணி எஸ் சந்திரன்- டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்பு.

திருவள்ளூர் மாவட்ட திமுக மாநகர, ஒன்றிய, நகர,  பகுதி, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்   கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ சட்ட மன்ற உறுப்பினர்கள் ,  வி.ஜி.ராஜேந்திரன் , ஆ.கிருஷ்ணசாமி, ஆகியோர்  முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்றார். 


இதில் கூட்டத்திற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட  செயலாளரும்,  தமிழ்நாடு  பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். பல்வேறு ஆலோசனை வழங்கினார் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் எம்பியும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் அப்போது அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசுகையில்.  ஒரு மொழிக்காக போராடி தனது உடலை தீக்கிரையாக்கி உயிர் நீத்த இயக்கம் என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான். 


அந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 25-ந் தேதி திருவள்ளூருக்கு வருகை தர இருக்கிறார். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நிர்வாகிகளை கூட்டத்திற்கு அழைத்துவர பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏற்கனவே சிறப்பான கூட்டம் என தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டத்தை சொல்லி வரும் நிலையில் இனி 25-ந்தேதிக்குப் பிறகு திருவள்ளூர் மாவட்டம் என சொல்லும் அளவுக்கு நாம் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  


இந் நிகழ்ச்சியில்  மாநகரக் கழக மேயர் உதயகுமார் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, நடுகுத்தகை ஜெ.ரமேஷ், பி.ஜெ.மூர்த்தி, மாநில நிர்வாகிகள் பிரபுகஜேந்திரன், சி.ஜெரால்டு, சி.எச்.சேகர், ஆர்.டி.இ.ஆதிசேசன், ஒ.ஏ.நாகலிங்கம், கே.ஜி.பாஸ்கர்சுந்தரம்,  ஜி.ஸ்டாலின், வே.அன்புவணன்,  மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், ம.இராஜி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி,  டாக்டர் வி.சி.ஆர்.குமரன், உதயமலர் பாண்டியன், சி.ஜெயபாரதி, எம்.மிதுன் சக்ரவர்த்தி, ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதம், கே.எம்.சுப்பிரமணியம், ராஜேஸ்வரி ரவீந்திரநாத், எஸ்.ஜெயபாலன், வி.ஜெ.சீனிவாசன், காயத்திரி ஸ்ரீதரன், பா.நரேஷ் குமார், த.எத்திராஜ், காஞ்சனா சுதாகர், ஜெ.மகாதேவன், மு.கதிரவன்,  உள்பட மாநகர ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் மற்றும் மாநகர, ஒன்றிய நகர, பேரூர், நிர்வாகிகள் கிளைக்கழக  செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  முடிவில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் டி.கே.பாபு நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad