பணி வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 January 2023

பணி வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


ஊத்துக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளிக்கு பணி வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் வசித்து வருபவர் எல்லையன் மகன் சிலம்பரசன்(வயது30) இவர் பி.எஸ்.சி. பட்டப் படிப்பு படித்து உள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு லாரி விபத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விபத்து ஒன்றில் சிக்கி வலது காலை இழந்து வயதான தாய் தந்தை ஆதரவில் வாழ்ந்து வந்தார்.


இந்நிலையில் பட்டப்படிப்பு முடித்த இவர் தாய் தந்தை வயது முதிர்ந்த காரணத்தினால் குடும்பம் நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 7. ஆம் தேதி மற்றும் 14ஆம் தேதிகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



இதன் பேரில் நவம்பர் மாதத்தில் ஊராட்சியில் நடைபெறும் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணி தல பொறுப்பாளராக பணியாணையை அளிக்குமாறு  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்தப் பணியாணையை எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் சிலம்பரசனிடம் வழங்கினார். இந்த ஆணையை பெற்றுக்கொண்டு ஊராட்சி அலுவலகத்திற்கு சென்ற போதெல்லாம் ஊராட்சி அலுவலகம் மூடிக் கிடக்கிறது. ஊராட்சி தலைவரிடம் நேரில் சென்று இது குறித்து எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது இதனை அடுத்து சிலம்பரசன் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று பணி வழங்குமாறு கேட்டபோது சரியான முறையில் பதில் அளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மாற்றுத்திறனாளி சிலம்பரசன் தாராட்சி ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார் இந்த தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் செஞ்சு வேல் சிலம்பரசன் இடம் சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தி பிப்ரவரி மாதம் பணி வழங்குவதாக கூறியுள்ளார் பின்னர் இது குறித்து மாற்றுத்திறனாளி சிலம்பரசன் கூறுகையில் பட்டப்படிப்பு முடித்தும் விபத்தில் சிக்கி கால் ஊனமுற்ற நிலையில் இருப்பதாகவும் தன் தாய் தந்தையர் இருவரும் வயது முதிர்ந்த காரணத்தினால் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு வாழ்வாதாரம் ஏதும் இல்லை என்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு முறை சென்று மனு கொடுத்ததின் பேரில் அவர் உத்தரவின் பேரில் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் பணிதல பொறுப்பாளராக பணி வழங்காமல் அளக்கடைப்பதாகவும் வயதான தாய் தந்தையர்களுக்கு ஒரு வேலை உணவு கூட வாங்க முடியாமல் நிலையில் உள்ளதாகவும் எனவே ஊராட்சி நிர்வாகம் தனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை தவிற வேறு வழியில்லை என்று எனவே இதன் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டு கொண்டு தனக்கு வேலை பெற்று தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாற்றுத்திறனாளி சிலம்பரசன் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad