திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் சமீபத்தில் ஏற்பட்ட மாண்டோஸ் புயல் தொடர் மழை காரணத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பாக பொன்னேரி வட்ட கிளை செயலாளர் திருமதி சித்ரா சுரேந்தர் தலைமையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களான சமையல் பாத்திரங்கள், கரண்டி பிளேட், டம்ளர், கிண்ணம் கத்தி, சமைக்கும் பெரிய பாத்திரம், தார்பாயிலின் ஆகியவை அடங்கிய தொகுப்பினை செயலாளர் திருமதி.சித்ரா சுரேந்தர் வழங்கினார்.
இதில் பொன்னேரி வட்ட கிளை வைஸ் சேர்மன் சுரேந்தர் அவர்களும் ஹெல்த் கமிட்டி சேர்மன் சஞ்சீவி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிவாரணம் பெற்றுக் கொண்ட பகுதி மக்கள் ரெட் கிராஸ் சொசைட்டிக்கு தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment