பொன்னேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 December 2022

பொன்னேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில்  அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட சார்பில் பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி  எம் எல் ஏவுமான சிறுனியம் பலராமன் தலைமை தாங்கினார், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித் தார்.ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



இதில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்.ராஜா, விஜயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான கிருஷ்ணாபுரம் பி.டி. பானு பிரசாத், மாணவரணி ராகேஷ், பொன்னேரி பேரூராட்சி முன்னாள் தலைவர் சங்கர் மற்றும்  மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள்  பேருர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகி கள், கிளைக் கழக நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பி னர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகி கள், தாய்மார்கள், பொதுமக்கள், வியாபாரிகள்,  என பலர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

Post Top Ad