உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 December 2022

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.


திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர் அணி செயலாளர் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும். இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.மகாலிங்கம்  ஏற்பாட்டில் சின்னம்மாபேட்டை கிராமத்தில் 500 ஏழை எளிய மகளிர்களுக்கு புடவை வழங்கியும், 30 முடித்திருத்தம் தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள், 10 சலவைத் தொழிலாளர்களுக்கு தேவையான இஸ்திரிப் பெட்டிகள், 3 கைப்பந்து விளையாட்டு அணிகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் வழங்கியும், 500 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.


அரிச்சந்திராபுரம் கிராமத்தில் 200 ஏழை எளிய மகளிர்களுக்கு சேலை வழங்கியும், இரும்பு சம்பந்தமான பொருட்களை பட்டை தீட்டும் தொழிலாளர்கள் 10 நபர்களுக்கு சாண இயந்திரம் வழங்கியும், முஸ்லீம் பெண் குழந்தைகளுக்கு இஜாப் துணிகளையும், 3 கைப்பந்து விளையாட்டு அணிகளுக்கு தேவையான விளையாட்டு கிட் வழங்கப்பட்டது. பொன்னாங்குளம் கிராமத்தில் உள்ள 20 பழங்குடியின குடும்பங்களுக்கு தேவையான அரிசி, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களும், மகளிர்களுக்கு புடவையும் வழங்கப்பட்டது. 



சின்னமண்டலி கிராமத்தில் 250 மகளிர்களுக்கு புடவை வழங்கியும், 5 கைப்பந்து விளையாட்டு அணிகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் வழங்கி, 500 நபர்களுக்கு அறுசுவை உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன், எம்.எல்.,ஏ., திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினார்கள். 


இந்நிகழ்ச்சியில் திருவாலங்காடு ஒன்றிய துணைப் பெருந்தலைவர் திருமதி. சுஜாதா மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் சி.ஜெயபாரதி, களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், ஒன்றிய நிர்வாகிகள் ஜி.ரமேஷ், பூசண்முகம், நீலவாதிசீனிவாசன், த.தினகரன், ஏ.பி.செந்தில்குமார், வி.ஜெகதீசன், ராஜேஸ்வரி பிரபாகர், தி.நந்தகுமார், சரஸ்வதி சந்திரசேகர், காஞ்சிபாடி சரவணன், வழக்கறிஞர் ஆர்.இராஜா, ம.வேழவேந்தன், ஜி.கே.பன்னீர்செல்வம், சி.செல்வம், சதீஷ், குணசேகர், ஏழுமலை, சரண்யா நாகராஜ், நந்தகுமார், பிரதீப், திருமலையான், புனிதவதி, அப்துல் ரஹீம், பாரூக், ஜாபர், டி.மூர்த்தி, தாமு, ஞானமூர்த்தி, செல்வராஜ், ஸ்ரீதர், விக்னேஷ், பத்மாவதி முருகானந்தம், பரந்தாமன், பாலா, பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad