கும்மிடிப்பூண்டி: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 December 2022

கும்மிடிப்பூண்டி: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.


உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர் பக்கத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜே.மோகன் பாபு ஏற்பாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும்  மாணவர்களுக்கு நலத்திட்டங்கள்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அடுத்த மாதர் பாக்கம் ஊராட்சியில் திமுக கழக மாநில இளைஞர் அணி செயலாளரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் இளைஞர் நலன் (மற்றும்) விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாடி வருகின்றனர்.


அதில் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம், பண்ணூர், விநாயகர் நகர், அரசு பெண்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் உள்ளிட்ட 4 பள்ளியில் பயிலும்1000 மாணவ மாணவிகளுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜே.மோகன் பாபு ஏற்பாட்டில் பேனா பெனிசில் நோட்டுப் புத்தகம் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கும் நிகழ்ச்சி மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் கலந்துகொண்டு முன்னதாக பஜார் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்து 500 பேருக்கு அறுசுவை பிரியாணி வழங்கினார். 


பின்னர் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்டங்களையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பா.சே.குணசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாதர் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், மற்றும் நிர்வாகிகள் முரளி, ரேவதி, கீதா, பாபு, பாஸ்கர், யஷ்வந்த், குமார், ஆர்கிடெக் மணி, கார்த்திக், மணிகண்டன், மனோஜ், வெங்கடேஷ், சசிகுமார், லோகேஷ், மா நெல்லூர் பாலச்சந்தர், சந்திரன், பெடிக்கர் ராஜா, ஆகியோர் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad