சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப., காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆனையரகம் அவர்கள் உத்தரவுப்படி, போதையில்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை ஒழிப்பு நடவடிக்கையாக இன்று 13.12.2022 செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளருக்கு கிடைத்த தகவலை அடுத்து செங்குன்றம் பேருந்து நிருத்தத்தில் TOURIST BAG கையில் வைத்து கொண்டு நின்றிருந்தவரை மடக்கி பிடித்து விசாரித்த போது அவரது பெயர் சொனாஜி எஸ். சபு ஆ/வ 22 தா/பெ K. சுனித்தாகுமாரி, பூந்தோப்பில் வீடு, TC 55/457, நிரமங்கரா பாப்பனாம்கோடு, திருவனந்தபுரம், கேரளா என்று தெரிய வந்துள்ளது.

மேலும் போலீசார் விசாரணையில் சொனாஜி எஸ். சபு கையில் வைத்திருந்த TOURIST BAG-ல் கஞ்சா எனும் போதை பொருள் இருப்பதாக கூறியுள்ளார். அந்நபர் வைத்திருந்த கஞ்சாவை ஆந்திரா சென்று வாங்கி வந்ததாகவும் அதை திருவனந்தபுரத்திற்கு எடுத்து சென்று விற்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அந்நபரை சுமார் 20 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட கஞ்சா என்னும் போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரகசிய தகவல் மூலம் கஞ்சா கடத்திய நபரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் முனியசாமி மற்றும் தனிப்படையினரை ஆவடி காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்.

No comments:
Post a Comment