பொன்னேரி தொகுதியில் டிடிவி தினகரன் பிறந்தநாள் பிரியாணி வழங்கள். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 December 2022

பொன்னேரி தொகுதியில் டிடிவி தினகரன் பிறந்தநாள் பிரியாணி வழங்கள்.


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பிறந்த நாளை யொட்டி பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கேக் வெட்டி பிரியாணி வழங்கினர்.


பொன்னேரி சட்டமன்ற தொகுதி க்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி. சங்கர் ராஜா தலைமை தாங்கி னார். சிறப்பு அழைப்பாளராக மாநிலக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் பங்கேற்றார்.


இதில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ராம்குமார், மகளிர் அணி மாலதி, மாவட்ட இணை செயலாளர் பானுமதி வழக்கறிஞர் பிரிவு சற்குணம், இளைஞ்ர் பாசறை ஜான்சன், பேருர் செயலாளர் தன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் எல்லாபுரம் அன்பு, சோழவரம் சுரேஷ், மீஞ்சூர் சூர்யா, கும்மிடிப்பூண்டி சுரேஷ், முனிரத்தினம், மாணவரணிகள் சதா, சாந்த குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ரகுபதி, சதீஷ், தயாளன், தமிழ் மணி வழக்கறிஞர் பிரிவு இளங் கோ, ஜெயக்குமார், வீரபாண்டியன், பழனி, மெதூர் கண்ணன், வஞ்சி வாக்கம் முத்துக்குமார், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad