திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ் பெற்ற அருள் மிகு சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் திருக்கோவில் உள்ளது.
இக்கோயில் புணரமைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கும் பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோவிலுக்கு வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, மற்றும் முக்கிய தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம் அவர்களது வாகன நிற்கும் இடத்திற்கு அறநிலைய துறை சார்பில் சுமார் 54 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுப்புறசுவர் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட சேர்மன் உமாமகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் சின்னம்பேடு சந்திரசேகர், சிறுவாபுரி கோவில் செயல் அதிகாரி செல்வ குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment