திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கூடுவாஞ்சேரி ஊராட்சி இந்த ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிட அலுவலகம் திறப்பு, டாக்டர் கலைஞர் படத் திறப்பு, தெரு பெயர் பலகை திறப்பு உள்ளிட்டவை திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் பய ணாளிகளுக்கு கலைஞர் காப்பீ ட்டு அட்டை வழங்கப்பட்டதது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா ரஜினி முன்னிலை வைத்தார். துணைத் தலைவர் கார்த்திக், ஊராட்சி செய லாளர் ஜெகன், ஆகியோர் வரவேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்துக் கொண்டு திட்ட பணி களை திறந்து வைத்தார். இதில் மாவட்ட சேர்மன் உமாமகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றியக் குழுப்பெருந் தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மீஞ்சூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் காணியம்பாக்கம் சு. ஜெகதீசன், காட்டாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மங்கை உமாபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

No comments:
Post a Comment