கும்மிடிப்பூண்டி அருகே தொடர் மழை காரணத்தினால் வாழ்வாதாரம் இழந்து பறித்தவித்த பழங்குடி மக்களுக்கு அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்களை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் செல்வி இளவரசி வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஓப சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சாலையின் கண்டிகை வில்லியர்ஸ் காலனி பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுமார் 86 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் தற்போது மாண்டச் புயல் தொடர் மழையின் காரணத்தினால் வாழ்வாதாரம் இழந்து வேலையில்லா திண்டாட்டத்தில் பரிதவித்து வந்தனர்.
இவர்களுக்கு உதவிடும் வகையில் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகை பேர் பகுதியில் இயங்கி வரும் அன்னை தெரசா கல்வி மருத்துவம் விளையாட்டு சமூக அறக்கட்டளையின் நிறுவன தலைவரும் முன்னாள் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை வட்டாட்சியருமான டாக்டர் செல்வி இளவரசி இந்தப் பழங்குடி மக்கள் வசிக்கின்ற இடத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி 86 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி காய் கனிகள் குழந்தைகளுக்கு பால் பிஸ்கட் பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு, பொருளாளர் பிரின்ஸ், நிர்வாகிகள் உமாபதி, லிசா, பாரதி,ஆதி முருகன், தியாகராஜன், மல்லிகா, சிராஜ், தினகரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment