திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இருந்து அம்பத்தூரை நோக்கி செல்லும் 35 அடி சாலை எப்போதும் போக்குவரத்து காணப்படுவது வழக்கம், மேலும் இங்கு கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை இருபுறங்களிலும் நிறுத்திவிட்டு செல்வது வழக்கம், இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து தடைபடுவது வாடிக்கை வருகிறது.

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூராக வாகனங்கள் நிறுத்துவதை போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் பிரபாவதி.

No comments:
Post a Comment