மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 December 2022

மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம்.


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  பொதுக்குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அடுத்த மீஞ்சூர் பகுதியில் உள்ள வள்ளுவன் வாசுகி திரு மண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பேரமைப்பு மாநில தலைவர் ஏ எம் விக்ரம் ராஜா கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் தேசிய முதன்மை துணைத் தலைவர் மாநில மாவட்ட கிளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர் சொந்தங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


முன்னதாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவர்-டி நந்தன், மாவட்ட முத்துப்பாண்டியன், மாவட்டபொருளாளர் முருகன், மாவட்டபகுதி செயலாளர் பன்னீர் செல்வம், மாவட்ட இணை செயலாளர்கள் அபூபக்கர், பால்பாண்டி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஏகாம்பரநாதன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், அலெக்சாண்டர், ராம்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோயில் ராஜ், முகமது அலி, மாவட்டப் பழம் பொருள் அமைப்பாளர் சந்தான குமார், மாவட்ட செய்தி தொடர்பா ளர் மில்டன், மாவட்ட சட்ட ஆலோச கர் சுரேஷ், மாவட்ட தகவல் தொடர்பு அணி சுரேஷ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் ரியாஸ் அகமத், மாவட்ட ஆலோச கர் நடராஜன், உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad