சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் ஆதிமூலம் ஆலயத்தின் 14ஆம் ஆண்டு திரு ஏடு வாசிப்பு திருவிழா கார்த்திகை மாதம் ஒன்பதாம் தேதி ஆலய அறங்காவலர் பார்குணம் தலைமையில் துவங்கப்பட்ட நிகழ்ச்சி இன்று கடைசி நாளாக கவரப்பாளையம் ஆஞ்சநேயர் ஆயிரத்திலிருந்து அய்யா வைகுண்டர் ஆலயத்திற்கு பால்குடம் ஏந்தி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சேர்க்காடு ஐயா வைகுண்ட ஆலயத்தில் சமர்ப்பித்து நிகழ்ச்சி துவங்கியது.

அருளாளர் மாரிமுத்து தலைமையில் ஆணி வைத்த பாதம் அணிந்து ஆணி வைத்து இருக்கையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறி அய்யா வைகுண்ட சாமிக்கு ஆப்பிள் ஆரஞ்சு வாழைப்பழம் இளநீர் போன்ற பல்வேறு பழங்களில் தோரணங்கள் அமைத்து ஐயா வைகுண்டருக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு பழங்கள் படையல் வைத்து சிறப்பு ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.
பின்பு அய்யா வைகுண்டருக்கு கருட வாகனத்தில் அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து சென்று ஆலயத்தில் கருட சேவை ஊஞ்சல் ஆராதனை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்நிகழ்ச்சியில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்ட பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு அனைத்து பக்தர்களுக்கும் 15 நாட்களாக மூன்று வேளையும் அன்னதானம் வழங்கினார்.

No comments:
Post a Comment