பூந்தமல்லி அருகே இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 December 2022

பூந்தமல்லி அருகே இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற வேன், பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்த்திசையில் மற்றொரு தனியார் நிறுவனத்தின் வேன் வந்து கொண்டிருந்தது.

போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்த நிலையில், போக்குவரத்து விதியை மீறி எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த வேன், சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் மீது மோதியது. நேருக்கு நேர் இரண்டு வேன்கள் மோதிக்கொண்டதில், வேன்களின் முன் பாகங்கள் நொறுங்கின.


இதில், இரண்டு ஓட்டுநர்களும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வேனில் இருந்த ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.


தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், நொறுங்கி கிடந்த வேன்களை அப்புறப்படுத்தி, இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து காவல் துறையினர், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர் 

No comments:

Post a Comment

Post Top Ad