பெரியபாளையம் அருகே டிராக்டர் விபத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 December 2022

பெரியபாளையம் அருகே டிராக்டர் விபத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி.


பெரியபாளையம் அருகே செங்கல் சூளையின் டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி மீது மற்றொரு டிராக்டர் ஏறியதில் தொழிலாளி உயிரிழப்பு. பெரியபாளையம் போலீசார் விசாரணை. அனுமதி சான்று, காப்பீடு இல்லாததால் விபத்து நடந்த வாகனத்தை செங்கல் சூளை உரிமையாளருக்கு சாதகமாக அதிகாரிகள் வாகனத்தை மாற்றியதாக குற்றச்சாட்டு.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கல்மேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வாரத்திற்கு ஒரு முறை அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வார்கள் இதனை அடுத்து மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக டிராக்டர்களில் பூச்சி அத்திப்பேடு நோக்கி சென்றுள்ளனர். அப்போது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி தண்டுமேடு பகுதியில் முன்னால் சென்ற டிராக்டரை மற்றொரு டிராக்டர் முந்த முயன்ற போது மோதியதில் டிராக்டரில் இருந்து திண்டிவனத்தை சேர்ந்த சேகர் என்ற தொழிலாளி கீழே விழுந்துள்ளார். 


முன்னால் சென்ற வண்டியை முந்த முயன்று இடித்த டிராக்டர் கீழே விழுந்த தொலாளி மீது ஏறி இறங்கியது. இதில் செங்கல் சூளை கூலி தொழிலாளி சேகர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல் சூளை நிர்வாகத்தின் அலட்சிய போக்கு காரணமாகவே தொழிலாளி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அழைத்து செல்ல கூடாது என்ற விதி உள்ள போதிலும் செங்கல் சூளை நிர்வாகத்தினர் சரக்குகளை ஏற்றுவது போல ஆட்களை டிராக்டர் மற்றும் லாரியில் அழைத்துச் செல்கின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய டிராக்டர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலரால் வழங்கப்படும் அனுமதி சான்று, வாகன காப்பீடு ஆகியவை இல்லாமல் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏறுபடுத்திய வாகனங்களை செங்கல் சூளை உரிமையாளருக்கு சாதகமாக விபத்து ஏற்படுத்திய வாகனத்தை மாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது போன்று முறை தவறி நடத்தும் செங்கல் உலகின் மீது உரிய நடவடிக்கை எடுத்து கூலி தொழிலாளர்களின் உயிரை காக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad