திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகரம் மாதிரவேடு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தடம் எண் 50m திருவேற்காடு - பிராட்வே, தடம் எண் 72c திருவேற்காடு - தி.நகர் ஆகிய வழிபட பேருந்துகளை மாதிரவேடு வழியாக இன்று முதல் இயக்கப்பட்டது.
இப்பேருந்துகளை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பால்வளத்துரை அமைச்சர் ஆவடி திரு சா.மு நாசர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் என். இ.கே மூர்த்தி, நகராட்சி ஆணையர் திரு எச்.ரமேஷ் & போக்குவரத்து பணியாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்

No comments:
Post a Comment