நேபாளத்தில் இறந்த வாலிபால் வீரரின் உடல் திருவள்ளூர் வருகை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 December 2022

நேபாளத்தில் இறந்த வாலிபால் வீரரின் உடல் திருவள்ளூர் வருகை.


நேபாளத்தில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் விளையாடுவதற்காக சென்று திடீரென ரத்த வாந்தி எடுத்து பலியான தமிழக வீரர் ஆகாஷின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு தாசன். இவருடைய மகன்கள் ஆகாஷ்(27), ஆதவன் (24). மூத்த மகன் ஆகாஷ் வாலிபால் விளையாட்டு வீரராக இருந்தார். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.


இந்த நிலையில் அவர் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி நேபாளத்தில் வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். கோவையில் உள்ள யூத் ஸ்போர்ட்ஸ் பிரமோஷன் அசோசியேஷன் என்ற அமைப்பு மூலம் இவர் ரங்கசாலா மைதானத்தில் விளையாட சென்றிருந்தார். அன்றைய தினம் முதல் சுற்று விளையாடியுள்ளார்.


இந்த நிலையில் அந்த சுற்றில் அவர் வெற்றி பெற்றும் உள்ளார். இதையடுத்து அவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள ஓய்வறையில் ஓய்வு எடுப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அந்த அறையில் அவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த சக விளையாட்டு வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஆகாஷ் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர் உயிரிழந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தங்களது மகனின் உடலை மீட்டு தருமாறு திருவள்ளஊர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோரும் அந்த ஊர் இளைஞர்களும் மனு அளித்தனர். மேலும் நல்ல உடல் ஆரோகியத்துடன் உள்ள ஆகாஷின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் புகார் அளித்தனர்.


இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேபாளத்தில் இருந்து ஆகாஷ் உடலை கொண்டு வர தமிழக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேபாளத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கைவண்டூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.


இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆகாஷின் உடல் வைக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் சா.மு. நாசர், எம்எல்ஏக்கள் சந்திரன், ஜோசப் சாமுவேல் ஆகியோர் ஆகாஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்றைய தினம் மதியம் ஆகாஷின் உடல் கைவண்டூர் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஆகாஷின் உடலை சக வாலிபால் வீரர்கள் சுமந்து வந்து நல்லடக்கம் செய்தனர். அவரது உடல் மீது அவருக்கு பிரியமான வாலிபால் வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad