பூந்தமல்லி பேருந்து நிலைய ஆண்கள் சிறுநீர் கழிப்பகத்தில் டேங்க் உடைந்து வீணாகும் தண்ணீர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 December 2022

பூந்தமல்லி பேருந்து நிலைய ஆண்கள் சிறுநீர் கழிப்பகத்தில் டேங்க் உடைந்து வீணாகும் தண்ணீர்.


திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஆண்கள் சிறுநீர் கழிப்பகம் உள்ளது. அந்த  இடத்தில் சின்டெக்ஸ் டேங்க் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.. அது ஒருபுறம் இருந்தாலும் தண்ணீர் பைப்புகளும் உடைந்து பேருந்து நிலையம் முழுவதுமாக தண்ணீர் வீணாக செல்கிறது.


இதனால் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில்  தண்ணீர் தேங்கி கொசு மற்றும் புழுக்கல் உற்பத்திக்கு ஆகிறது. மேலும் இந்த தண்ணீரில் நடந்து  செல்ல பொதுமக்கள்  மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பொறியாளரிடம் தகவல்  தெரிவித்தபோது பணம் இல்லாத காரணத்தினால் எந்த பணியும் செய்ய இயலாது என்று ஒரே வார்த்தையில் கூறி வருகிறார். மேலும் சேர்மனிடம் புகார் கூறுகள் என்றும் தான்தோன்றிதனமாக பதில் தெரிவிக்கிறார். 


அதுமட்டுமின்றி,  இல்லையென்றால் என்ன? என்னை பணி மாறுதல் செய்வார்கள் அவ்வளவு தானே? என்ன செய்வது பணம் இல்லை பணம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தான்தோன்றிதனமாக பொறுப்பற்று பதில் பேசுகிறார். பணம் இல்லாத நகராட்சியில் இவர்களுக்கு மட்டும் ஊதியம் எப்படி வழங்கப்படுகிறது  என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பிகின்றனர்.

 

மேலும் தண்ணீர் சிக்கனம் என்று அறிவுறுத்தும் அரசு அதிகாரிகள். இதுபோன்ற தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மெத்தனம் காட்டுவது ஏன்..? அறுவுரையெல்லம் பொதுமக்களுக்குதானா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.   மேலும் இதன் அருகாமையில் திறந்த நிலையில் மின் ஒயர்களும் மெயின்பாக்ஸ் இருப்பதனால் உயிர் பலி ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா... இல்லை உயிரி பலி நேர்ந்தபின் பிறர்மீது குறைகூறி விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுப்பார்களா.


இதுகுறித்து பூந்தமல்லி நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆணையர் நடவடிக்கை எடுப்பார என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

No comments:

Post a Comment

Post Top Ad