இந்த நிலையில் சங்கீதாவிற்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த வாரம் வீட்டில் சங்கீதா கழுத்தை நெறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் காதில் அணிந்திருந்த கம்மல், கொலுசு ஆகியவற்றை ராஜு எடுத்து சென்றாக தெரியவந்ததது. மேலும் உடற்கூராய்வில் சங்கீதா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக உள்ள ராஜுவை பிடிக்க பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் தனி படைகள் அமைத்து ராஜூவை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் மும்பையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் மும்பையில் ராஜுவை கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், 'உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராஜு மும்பைக்கு வேலைக்கு சென்ற போது அங்கு பழக்கமான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சென்னைக்கு வேலைக்கு வந்தபோது அம்சவல்லியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் மனைவியை மும்பையில் விட்டு விட்டு, இங்கு சில நாட்கள் தங்கி பின்னர் மும்பைக்கு சென்று வந்தது தெரிய வந்தது.
இவர் மும்பையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், சம்பவத்தன்று சங்கீதாவை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாகவும் அதற்கு சங்கீதா மறுத்ததால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, அதன் பிறகு சங்கீதாவை பாலியல் வன்கொடுமை செய்து, நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் காதில் அணிந்திருந்த கம்மல், கொலுசு ஆகியவற்றை எடுத்து கொண்டு மும்பைக்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் கைது செய்யப்பட்ட ராஜுவை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் பூந்தமல்லியில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
No comments:
Post a Comment