திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா திருவாலங்காடு ஒன்றியத்தில் அமைந்துள்ள திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் இணைந்த திருவாலங்காடு அருள்மிகு. வடாரண்யேஸ்வர சுவாமி தெப்ப திருவிழா 22.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த தெப்ப திருவிழாவில் வடாரண்யேஸ்வரர் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்,பக்தகோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

No comments:
Post a Comment