ரெடிங்டன் பவுண்டேஷன், காவேரி ஆஸ்பிடல் இணைந்து மருத்துவமனை திறப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 November 2022

ரெடிங்டன் பவுண்டேஷன், காவேரி ஆஸ்பிடல் இணைந்து மருத்துவமனை திறப்பு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது கீழ்முதலபேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள கவரப் பேட்டை பகுதியில் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை மற்றும் ரெடிங்டன் பவுண்டேஷன் இணைந்து இலவச மருத்துவமனை துவக்கி வைக்கப்பட்டது.


இம்மருத்துவமனையை கும்மிடிப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், காவேரி மருத்துவ மனை மெடிக்கல் இயக்குனர் டாக் டர் ஐயப்பன், மெடிக்கல் அட்மின் டாக்டர் சந்தோஷ், முதன்மை ஊழியர் உமா, மார்க்கெட்டிங் மேனேஜர் கலையரசன், ரெடிங்டன் பவுண்டேஷன் டாக்டர் அருள் பிரசாத், ஹரி, மற்றும் ஊராட்சி செயலர் சாமுவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



>

இந்த மருத்துவமனையில் பொது மக்களுக்கு இலவசமாக மருத்து வம் பார்ப்பது மருந்து மாத்திரை கள் வழங்குவதுடன் முக்கிய நோய் தொடர்பான சிகிச்சைகள் குறித்து உடனடியாக பெரிய மருத் துவரிடம் கான்பரன்ஸ் வசதியுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது, இதனையடுத்து இப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad