திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் குடிநீர் தொட்டியில் தினமும் தவறாமல் தண்ணீர் நிரப்ப வேண்டி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் 18 வார்டில் உள்ள தண்ணீர் தொட்டி 6 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது.

இதில் 15 நாட்கள் வரை சரியாக தண்ணீர் நிரப்பபட்ட நிலையில், அதன் பின்னர் சரியாக நிரப்பப்படுவதில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர், மேலும் தண்ணீர் தொட்டிக்கு என தனியாக மோட்டர் அமைத்து கொடுத்தால் மக்களே தேவைப்படும் போது தண்ணீர் நிரப்ப முடியும் என்று தெரிவிக்கின்றனர். எனவே விரைவாக மின் இணைப்பு கொடுத்து மோட்டார் அமைக்க மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் பிரபாவதி.

No comments:
Post a Comment