தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பாக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட தலைவர் திரு அஸ்வின்குமார், அவர்களின் தலைமையில் மாநில செயலாளர் மாவட்ட பார்வையாளர் சகோதரி திருமதி.ஆனந்தபிரியா அவர்களின் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு.வினோஜ்.பி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்ட மக்கள் விரோத தமிழக அரசு கட்டணக்கொள்ளையை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி மாநகரில் நடைபெற்றது. இதில் பால், மின்சாரம், சொத்து வரி போன்ற அடிப்படை பிரச்சினைகளின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் பெரும் அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment