ஆவடி, அசோக் நிரஞ்சன் நகர் 3வது தெருவில் தண்ணீர் வெளியேறாமல் சாலையில் குளம்போல் தேங்கியிருப்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வீட்டில் முடங்கி விட்டனர். கடந்த மாதம் இந்த பகுதியில் பெரும்பாலான சாலைகள் சிமெண்ட் சாலைகளாக போடப்பட்ட போது 3வது தெரு விடுபட்டது இதற்கு காரணமாகும். ஆவடி மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீரை வெளியேற்றவும், தரமான சாலை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment