இந்நிலையில் அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. புழல் ஏரியில் 1854 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் தற்போது 18.42 அடியாக உள்ளது. புழல் ஏரிக்கு 2000 கண்ணாடியாக வந்து கொண்டிருந்த உபரி நீர் தற்போது 539 கனஅடியாக குறைந்து சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஒரே நாளில் புழல் ஏரியில் 156 மில்லியன் கனஅடி நீர் வரத்து உயர்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்பதால் புழல் ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போது புழல் ஏரி 81.57% நீர் இருப்பை நெருங்கிய நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது.

நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் அறிவுறுத்தி உள்ளார். அதேபோல் உபரி நீர் கால்வாய் பொதுமக்கள் யாரும் புகைப்படம் எடுக்கவோ துணி துவைக்கவோ வேடிக்கை பார்க்கவோ செல்பி எடுக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே போல நவம்பர் மாதம் 7ஆம் தேதி புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment